SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கல்வராயன்மலை சுற்றுலா தலமாக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

2017-02-27@ 12:49:25

சின்னசேலம் : சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கல்வராயன்மலையை அரசு சுற்றுலா தலமாக அறிவித்து தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ஓங்கி உயர்ந்து கல்வராயன்மலை காணப்படுகிறது. இந்த மலையின் மேற்கே சேலம், தருமபுரி மாவட்டம், கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த மலையில் படகு குழாம், நீர்வீழ்ச்சிகள், ஓங்கி உயர்ந்த மலை முகடு, மரங்களின் இயற்கை அழகு பார்ப்பவர்களின் மனதை பரவசத்தில் ஆழ்த்தும்.

கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் ரம்மியமான கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. இந்த அணை கட்டப்பட்ட ஆரம்பகாலத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், புதுவை பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன்  வந்து தங்கி கண்டுகளித்து சென்றனர். இடையில் பராமரிப்பு இன்றி இருந்த கோமுகி அணை உள்ளூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனின் முயற்சியால் ரூ.35 லட்சம் செலவில் அழகிய பூங்காவும் சீரமைக்கப்பட்டது. பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் ரூ.6 கோடி செலவில் அணை கரைகளின் மேல் தார்சாலை அமைக்கப்பட்டதுடன், சூரிய விளக்கு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.  மேலும் பூங்காவை சீரமைக்க பொதுப்பணித்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கோமுகி அணைக்கும், அதையொட்டிய பூங்காவுக்கும் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் மாணவர்கள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மலையில் பச்சை பசேலென ஓங்கி உயர்ந்த மரங்களும், வெள்ளிக்காசு சில்லென கொட்டுவது போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் கல்வராயன்மலையில் உள்ள பெரியார், மேகம், சிறுக்கல், எட்டியருவி போன்ற நீர்வீழ்ச்சிகளில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியல்போட்டு செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களில் பேருந்து, டிராவல்ஸ் வேன், கார் போன்றவைகள் நீர்வீழ்ச்சி, படகு துறை போன்ற இடங்களில் அணிவகுத்து நிற்கும். அதைப்போல என்றென்றும் வற்றாத சுனைபோல படகு குழாம் நீர் நிறைந்து காணப்படும்.
அதனால் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் படகு சவாரியும் செய்வார்கள். கல்வராயன்மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்லும் வகையில் மூங்கில் குடில், ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. சமீபத்தில் கோடைவிழாவுக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராசன் மலையை சுற்றுலா தலமாக்க உறுதிமொழி அளித்தாலும்கூட அரசு காலம் தாழ்த்துகிறது.

மேலும் மலையில் உள்ள குரங்கு, மான்கள், காட்டெருமை, கரடி, செந்நாய் போன்ற விலங்குகளை கொண்டு வனவிலங்கு பூங்காவையும் படகுதுறை அருகில் அமைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏழைகளின் ஊட்டியான கல்வராயன்மலையை நாமும் சுற்றி பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் தினம் தினம் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தங்க, உணவு சாப்பிட மலையில் போதுமான வசதிகள் இல்லை. கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக்கினால்தான் மலையில் அரசு சார்பில் பயணிகள் தங்க அரசு தங்கும் விடுதிகளை கட்டுவதுடன், பிற வசதிகளும் செய்து தரப்படும். இதன்மூலம் பொருளாதார அளவிலும் மலைமக்கள் வாழ்வு வளம்பெற வாய்ப்பு உள்ளது. எனவே அரசு கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்