SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படித்துறை அமைத்து வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

2017-02-22@ 12:07:28

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர், கரைமேடு பகுதியில் அமைந்திருக்கும் வாலாஜா ஏரியில் படித்துறை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் வாலாஜா ஏரியானது, நெய்வேலி என்எல்சி சுரங்கத்திலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேற்றப்படும் நீரை தேக்கி வைப்பதற்காக என்எல்சி நிர்வாகத்தினரால் உருவாக்கப்பட்டது. இந்த ஏரி 1600 ஏக்கர் பரப்பளவும், சுமார் 11 அடி ஆழமும்  கொண்டது.

இதில் தேக்கப்படும் தண்ணீர் ஏரியைச் சுற்றியுள்ள வளையமாதேவி, எறும்பூர், மதுவானைமேடு, நெல்லிக்ெகால்லை, சின்னநெல்லிக்கொல்லை, பின்னலூர், உளுத்தூர், அம்பாள்புரம், தலைக்குளம், மருதூர், கரைமேடு, மருவாய் உள்ளிட்ட பல கிராமங்களின் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் பயன்பட்டு வருகிறது. எல்லா காலங்களிலும் ஏரியில் தண்ணீர் நிறைந்து இருப்பதால் கடல் போல காட்சியளிக்கிறது. சில நேரங்களில் இதிலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வெள்ளாற்றுக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

ஏரியில் என்எல்சி சுரங்க நீர் தேக்கி வைக்கப்படுவதால் அதிலிருக்கும் மண் துகள்கள் ஏரியின் உள்ளேயும், கரை ஓரங்களிலும் படிந்து புதை படிவமாக மாறியுள்ளது. அதனால் ஏரியில் மனிதர்கள், விலங்கினங்கள் இறங்கும்போது அதில் புதைந்து தப்பிக்க முடியாத நிலையும், உயிரிழப்பும் ஏற்கனவே ஏற்பட்டு உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு ஏரியின் கரை ஓரங்களில் கூழாங்கற்கள், கருங்கல் ஜல்லியும் கொட்டி சமன்படுத்திட வேண்டும். உரிய பாதுகாப்போடு படித்துறைகள் அமைத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் அதிகளவில் இந்த ஏரிக்கு வெளியிடங்களில் இருந்து பலவிதமான பறவைகள் வருகின்றன. தேக்கு உள்ளிட்ட மரங்
களும் அதிகளவில் வளர்ந்துள்ளதால் இப்பகுதியை தமிழக அரசு சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
buy naltrexone maltrexon ldn naltrexone
naltrexone injections click stopping ldn

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்