SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிப்படை வசதிகள் ஏதுமில்லை சுற்றுலாத்துறை மெத்தனத்தால் மேம்பாடு அடையாத பிச்சாவரம் சுற்றுலா பயணிகள் அதிருப்தி

2017-02-21@ 14:06:24

சிதம்பரம் : பிச்சாவரத்தில் அடிப்படை வசதிகள் உள்பட பயணிகளை கவரும் எந்த பணிகளையும் சுற்றுலாத்துறை மேற்கொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது அழகிய பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்தியாவில் மேற்குவங்கம் மாநிலத்திலும், தமிழகத்தில் பிச்சாவரம், வேதாரண்யத்தில் மட்டுமே சதுப்பு நிலக்காடுகள் உள்ளது.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுரபுன்னை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. சுரபுன்னை செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். பிச்சாவரம் வரும் சுற்றுலா பயணிகள் படகுகளில் சுரபுன்னை செடிகளை ஊடுருவி சென்று இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டு ரசித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் வருகின்றனர்.

விடுமுறை தினங்களில் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் படகுகளில் செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுலா மையத்தில் வனப்பகுதியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுரத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த அதிநவீன தொலைநோக்கு கருவி மூலம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து வந்தனர்.

தற்போது அங்கிருந்த தொலைநோக்கு கருவி பழுதடைந்ததால் தற்போது உயர் கோபுரம் மட்டும் உள்ளது. அதற்கு நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா மையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவக்கிரக கோயில்களுக்கு செல்ல வழிகாட்டுவதற்காக ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனர் கிழிந்து காணப்படுகிறது. அதனை மாற்றக்கூட சுற்றுலாத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுற்றுலா மையத்தில் உள்ள பூங்காவை மேம்படுத்த வேண்டும். வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளூர் தயாரிப்பு உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பராமரிப்பு இல்லாத பிச்சாவரம் சுற்றுலா தலத்தை மேலும் பல வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. இதனையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

against abortion number of abortions per year abortion videos
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
naltrexone injections click stopping ldn

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

  • indonesiya vellam20

    வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்