SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காணும் பொங்கல் கொண்டாட்டம் பவானிசாகர் அணைப்பூங்காவில் குவிந்த மக்கள் கூட்டம்

2017-01-17@ 12:02:38

சத்தியமங்கலம் : காணும் பொங்கலை முன்னிட்டு  பவானிசாகர் அணைப்பூங்காவில் மக்கள்  கூட்டம் நிரம்பி வழிந்தது. பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில்  அணைப்பூங்கா உள்ளது. பூங்காவில் படகு வசதி, சிறுவர் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கும், ஊஞ்சல், செயற்கை நீரூற்று மற்றும் அழகிய  கூடாரங்கள் உள்ளன. இதனால் விடுமுறைக்காலங்களில் அதிக அளவில் பயணிகள் வருவது வழக்கம்.

பொங்கலையொட்டி தொடர்விடுமுறை என்பதால் நேற்று காலை முதல்  பொதுமக்கள் பூங்காவிற்கு கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். ஈரோடு  மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும்  அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும் அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். அணைப்பூங்காவில் உள்ள படகில் குடும்பத்துடன் பயணம் செய்ய பார்வையாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். சிறுவர் மற்றும் சிறுமியர் சறுக்கு மற்றும்  ஊஞ்சல்களில் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவினுள் உள்ள தண்ணீரில் சிறுவர்  சிறுமியர் குளித்து  விளையாடினர்.  
 
பார்வையாளர்கள் வருகை அதிகரித்ததால் செயற்கை நீருற்றுகள் இயக்கப்பட்டது. பூங்கா பகுதியில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக தினமும் 5000 சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இப்பூங்காவிற்கு நேற்று பண்டிகை தினம் என்பதால் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயணிகள் வரை வந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்