SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஈரோடு வஉசி., பூங்காவில் காணும் பொங்கல் உற்சாகம் பெண்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்

2017-01-17@ 11:58:21

ஈரோடு : ஆண்டுதோறும் ஈரோடு வஉசி., பூங்கா மைதானத்தில் காணும் பொங்கலையொட்டி பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரையிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்று ஆட்டம், பாட்டம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். நேற்றும் காணும் பொங்கலையொட்டி காலையில் இருந்தே ஈரோடு மாநகரை சுற்றியுள்ள பெண்கள் மட்டுமின்றி பவானி, மொடக்குறிச்சி, எழுமாத்தூர், பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்,  குமாரபாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.  

வீட்டில் சமைத்த உணவை எடுத்து கொண்டு, நொறுக்குத்தீனிகளுடன் பங்கேற்று ஆடியும், பாடியும் மகிழ்ந்தனர். சில இடங்களில் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும் பெண்கள் அசத்தினர். வட்டமிட்டு குலவை அடித்தும், கானா பாடல்களை பாடியும் வயது வித்தியாசமின்றி ஆடி, பாடி மகிழ்ந்தனர். இன்னும் சில பெண்கள் வாத்தியக்கருவிகளான டோலாக்கு, தப்பட்டை போன்றவற்றை எடுத்து வந்து அவர்களே இசைத்தபடி பாடி ஆடினர். பல பெண்கள் சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு நடனம் ஆடினர்.  
 
இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெண்கள் கூறுகையில், ஆண்டு முழுவதும் வீட்டு வேலைகளை செய்தும், வெளியில் பணிக்கு சென்றும் சோர்ந்திருக்கும் எங்களுக்கு இந்த காணும் பொங்கலில் எல்லா கவலைகளையும் மறந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியடைவோம். வயது வித்தியாசம் இன்றி, கூச்சத்தை மறந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியடைகிறோம். இந்த நாளுக்காக ஆண்டு முழுவதும் காத்திருந்து இங்கு வந்து எங்கள் கவலைகளை மறந்து ஆடுகிறோம் என்றனர். ஈரோட்டில் நேற்று நடந்த காணும் பொங்கல் பண்டிகையால் வஉசி., பூங்கா களை கட்டி காணப்பட்டது.

வெளியே காத்திருந்த ஆண்கள்
காணும் பொங்கலையொட்டி வஉசி., பூங்காவிற்குள் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் வஉசி மைதானத்தின் நுழைவாயிலிலேயே போலீசார் வழிமறித்து பெண்களுடன் வந்த ஆண்களை வெளியே நிறுத்தி விட்டனர். இதனால் ஆண்கள் உள்ளே செல்ல முடியாமல் கேட்டிலேயே காத்திருந்தனர். சில பெண்கள் தங்களது கைக்குழந்தைகளை ஆண்களிடம் கொடுத்து விட்டு பூங்காவிற்குள் சென்று விட்டனர். இதன் காரணமாக குழந்தைகளுடன் வாசலிலேயே ஆண்கள் பரிதாபமாக காத்திருந்தனர்.

third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
against abortion number of abortions per year abortion videos

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்