SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் காணும் பொங்கலால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

2017-01-17@ 11:56:08

மதுரை : மதுரையில் காணும் பொங்கலை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று சுற்றுலாத் தலங்கள் களைகட்டின. எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாகவே தென்பட்டன. இந்த விழாவை முன்னிட்டு, மதுரையில் மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களான காந்தி மியூசியம், ராஜாஜி பூங்கா, மகால், தெப்பக்குளம் ஆகியவற்றில் குவிந்தனர். பூங்காவில் நேற்று சிறுவர்களுக்கான விளையாட்டு இயந்திரங்கள் இயக்கப்பட்டன.

காந்தி மியூசியத்தில் காட்சிக்கூடத்துடன், அருங்காட்சியகப் பகுதிகளையும் சுற்றிப்பார்த்தனர். இதேபோன்று திருமலைநாயக்கர் மகாலிலும் காலையில் இருந்து இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. தர்பார் மண்டபம், ராஜாவின் சிம்மாசனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நின்று பெண்கள், சிறுவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர். இதேபோல் அழகர்கோயிலுக்குச் சென்று மலை மேல் உள்ள தீர்த்தத்தில் புனித நீராடினர்.

கள்ளழகரை தரிசனம் செய்து இக்கோயிலில் பெயர்பெற்ற சம்பா தோசையை வாங்கி ருசித்தனர். பிரசாதமாகவும் வீட்டுக்கும் வாங்கிச் சென்றனர்.
அணைக்கரப்பட்டியில் உள்ள அனுமார் கோயிலிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்தனர். சில குடும்பத்தினர் மதுரை விமான நிலையத்தின் ஓடுதளப் பகுதி அமைந்துள்ள சின்னஉடைப்பு, வளையங்குளம் பகுதியில் உள்ள மேடான பகுதியில் நின்று விமானங்கள் வந்து செல்வதைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர். சிலர் வைகை ஆற்றின் கரையில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர்.

getting an abortion i had an abortion terminating pregnancy at 20 weeks

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்