SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2016-12-27@ 12:51:07

கிருஷ்ணகிரி : பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி படகு இல்லம், சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். தமிழகத்தில் கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவினை தொடர்ந்து பள்ளிகளுக்கு புத்தாண்டு வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பள்ளி குழந்தைகள் விடுமுறையை கழிக்க பல்வேறு சுற்றுலா தலங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கிருஷ்ணகிரி மட்டுமின்றி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி அணையில் உள்ள பூங்கா, மான் பண்ணை, தண்ணீர் தேங்கியுள்ள பகுதி மற்றும் தென்பெண்ணை ஆறு இடங்களில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அணை பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்கு பலகையில் பெரியவர்களும் விளையாடி மகிழ்ந்தனர். அணைக்கு செல்லும் வழியில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும், படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதை கண்டு சாலையோர தற்காலிக கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐஸ் கிரீம் விற்பனை சூடுபிடித்தது. குறிப்பாக அணை பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் மீன் விற்பனை அமோகமாக நடந்தது. எஸ்.பி மகேஷ்குமார் உத்தரவின்படி கிருஷ்ணகிரி அணை போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
against abortion blog.hoomla.se abortion videos
abortion clinics rochester ny gamefarm.se after morning pill

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்