குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்
2018-08-06@ 17:52:40

தென்காசி : விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மெயினருவி, ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக சாரல் மாயமானது. சாரல் இல்லாத போதும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு நன்றாக விழுகிறது. நேற்று மதியம் வரை வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. அத்துடன் மனதுக்கு இதமான குளு குளு தென்றல் காற்றும் வீசியது.
மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஓரளவு நன்றாக விழுகிறது. நேற்று விடுமுறை தினம் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலைமோதினர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
மேலும் செய்திகள்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்!
சாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்
குற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது
தென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்
சுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்