சுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது
2018-03-26@ 14:06:39

தென்காசி: குற்றாலத்தில் சுட்டெரித்து வரும் வெயிலால் மெயினருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. புலியருவி வறண்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக தண்ணீர் விழுகிறது. பெண்கள் பகுதியில் தண்ணிர் விழவில்லை. இதனால் ஆண்கள் பகுதியிலேயே சிறிது நேரம் ஆண்களும், பெண்களும் மாறி மாறி தலையை நனைக்கின்றனர். ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் குறைவாக தண்ணீர் விழுகிறது. புலியருவில் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. பழைய குற்றாலத்தில் குறைவாக விழுகிறது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிதமாக இருந்தது.
மேலும் செய்திகள்
குற்றாலத்தில் வெயிலும்... இதமான சூழலும்... அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து
மலைப்பகுதியில் தொடர் சாரல் குற்றால அருவிகளில் கொட்டுகிறது:சுற்றுலா பயணிகள் குஷி
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்!
சாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்
குற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்