SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’

2018-02-07@ 12:29:22

கொடைக்கானல்: கடும் குளிர் நிலை மாறி கொடைக்கானலில் இதமான குளிர் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இரவு மட்டுமின்றி, அதிகாலையிலும் ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டது. சுற்றுலாப்பயணிகளின் வருகையும் குறைவாக இருந்ததால் கடை உரிமையாளர்களும் கவலையடைந்தனர்.

தற்போது கடும் குளிர் சூழல் மாறி, கடந்த சில நாட்களாக கொடைக்கானல் இதமான குளிருக்கு மாறி வருகிறது. பகலில் வெயிலுடன் இதமான குளிரும், இரவில் சற்று கூடுதலான குளிரும் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் ரசித்து அனுபவிக்கும் தட்பவெப்ப நிலை ஏற்பட்டிருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொ டைக்கானலில் வரலாறு காணாத அளவுக்கு உறைபனி கொட்டி மக்களை நடுங்க வைத்தது.

தற்போது இந்நிலை மாறி சுற்றுலாப்பயணிகள் அனுபவிப்பதற்கு ஏற்றதுபோல் நல்ல தட்பவெப்பம் நிலவி வருகிறது. இதனால் வரும் நாட்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றனர்.  கொடைக்கானலில் வெப்பநிலை பகலில் அதிகபட்சமாக 17 டிகிரி, இரவில் சராசரியாக 12 டிகிரி பதிவாகி உள்ளது.

கோடை காலத்தை வரவேற்க ‘கொட்டியது’
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயில் அடித்தும், இரவில் உறைபனி படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றுமாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மஞ்சு மூட்டம் காணப்பட்டு சாரலாக தூறியது. மஞ்சு மூட்டத்துடன் மழை பெய்வது குளிர் காலம் குறைந்து கோடைகாலத்தை வரவேற்பதற்கான அறிகுறியாம். இதனால் பொதுமக்கள், சுற்றுலா தொழில்புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்