SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல்

2018-01-22@ 12:19:35

பென்னாகரம்: விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களை கட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் பரிசல் ஓட்டிகள், மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால் ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்