SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் விடுமுறை எதிரொலி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

2018-01-17@ 12:31:22

இலுப்பூர்: தொடர் விடுமுறை காரணமாக சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.       
புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் மணப்பாறை சாலையில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்குள்ள சமணர் படுகை, குகை ஓவியம் ஆகியவை உலக புகழ் பெற்றவை. இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், சுற்றுலாத்துறை சார்பில் சிற்பங்கள், மரங்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்கா மற்றும் படகு குழாம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை, மணப்பாறை. திருச்சி, விராலிமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சித்தன்னவாசல் வந்தனர்.

அவர்கள் மலையின் மீது சென்று சமணர் படுகை, குகை ஓவியம் போன்றவற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் பூங்காவில் பொழுது போக்கிய அவர்களில் பலரும், குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுகுறித்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறும்போது, விராலிமலையில் இருந்து சித்தன்னவாசல் சுற்றுலா மையம் செல்வதற்கு அறிவிப்பு பலகைகள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பொதுமக்களிடம் வழிகேட்டு வந்து சேர்ந்தோம். வெளியூர்களில் இருந்து வருவோர் பயன்பெறும் வகையில் புதுக்கோட்டை. விராலிமலை, கீரனூர் பகுதிகளில் சித்தன்னவாசலுக்கு செல்லும் வழி மற்றும் தூரம் குறித்த அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும் என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்