SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

2018-01-02@ 14:58:34

புதுச்சேரி, ஜன. 2: புதுவையில் ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புதுச்சேரி மாநிலம் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பெயர் போனது. அதன்படி, 2017ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த வாரமே புதுவையில் குவியத் தொடங்கினர். இதனால் அனைத்து ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் நிரம்பின. மேலும் புதுச்சேரி நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை கொண்டாட கடற்கரை சாலை முழுவதும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர். 12 மணி ஆனதும் 'ஹேப்பி நியூ இயர்’ என புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை புதுச்சேயில் உள்ள கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் புதுவை கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று பொழுதை போக்கினர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், புதுச்சேரி நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை கடற்கரை சாலையில் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆரோ கடற்கரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் புதுவை முழுவதும் நகரமே களைகட்டி காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்