SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

2018-01-02@ 14:56:38

கிருஷ்ணகிரி, ஜன.2: புத்தாண்டு விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவையும் இணைந்துவிட்டதால் நேற்று (1ம் தேதி) வரை விடுமுறை இருந்தது.

விடுமுறையின் கடைசி நாளான நேற்று கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், அண்டைய மாவட்டமான வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லங்களில் குவிந்தனர். இந்த பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது.

சுற்றுலா வந்த பயணிகள் தங்கள் குழந்தைகளை பூங்காவில் உள்ள சருக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாட வைத்து மகிழ்ந்தனர். அத்துடன் அணையின் மேற்புரத்தில் உள்ள மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இரு பூங்கா பகுதியிலும் கூட்டம் அலைமோதியதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுத்திட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்