SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

2018-01-02@ 14:44:53

பென்னாகரம்:  ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். ஒகேனக்கல் என்றாலே ஓங்கி உயர்ந்த பாறைகள் தான் நினைவுக்கு வரும். பாறை இடுக்குகளில் இருந்து அருவியாய் கொட்டி பொங்கி வரும் காவிரி, ஆயில் மசாஜ் எடுத்துக்கொண்டு உற்சாக குளியல், ஆசை ஆசையாக குளித்த பின்பு மீன் வருவல், குழம்புடன் சுட சுட சாப்பாடு மற்றும் பரிசல் சவாரி தான் அனைவரின் நினைவுக்கு வரும். தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், ஒகேனக்கல் பிரதான இடத்தை பிடித்துள்ளது. இதனால், வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்று வருவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

 கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சுமார் 150 கி.மீ., தொலைவில் உள்ள ஒகேனக்கல்லை அடையும்போது, வழியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு அகன்று விரிந்து சென்றவாறு ஓங்கி உயர்ந்த மலை இடுக்குகளில் இருந்து நுங்கும் நுரையுமாக புகை மண்டலத்துடன் அருவியாய் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாகும். இதனால், ஆண்டுமுழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் சுற்றுலா வந்து செல்கின்றனர்.

 நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல்லில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால், சுகாதார சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக காரியம் செய்வதற்காக வருபவர்கள், ஆற்றில் அப்படியே களைந்து விட்டுச் செல்லும் துணிமணிகள், பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி அறியாமல் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருபவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. இதபோல், பல்வேறு இடங்களில் கழிவுநீரும் காவிரியில் கலக்கிறது.
 இந்த கழிவு நீர் கலந்த தண்ணீர் தான், மேட்டூர் அணையை சென்றடைகிறது. அங்கிருந்து சேலம் மாநகராட்சி, மேட்டூர்- ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒகேனக்கல்லை ஏனோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீண்ட காலமாகவே கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

 மாநில எல்லையில் ஒரு மூலையில் இருக்கும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலத்திற்கு, ஏனோ முக்கியத்துவம் கொடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றனர். வெளியிடங்களிலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளை முதலில் வரவேற்பது என்னவோ துர்நாற்றம் தான். நாள் கணக்கில் அகற்றப்பட்டாத மீன் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளிலிருந்து வீசும் துர்நாற்றத்தை உள்ளூர் மக்கள் சகித்துக்கொண்டு காலம் கடத்தினாலும், ஒகேனக்கல் இயற்கை அழகில் மயங்கி தொடர்ந்து சுற்றுலா வருவோரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால், குடும்பத்தோடு முதன்முறையாக சுற்றுலா வருவோரின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், ஆற்றில் பரிசல் சவாரி செய்து குதூகலித்தனர். மேலும் தொங்கு பாலம் வழியாக இடைத்திட்டு பகுதிக்கு சென்று பொழுது போக்கினர். அங்குள்ள சினி பால்ஸில் குளித்து கும்மாளமிட்டனர். இதனால், எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2018

  20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • LumiereFestivalLondon

  லண்டனில் லூமியர் ஒளி திருவிழா 2018: வண்ண விளக்குகளில் காட்சியளிக்கும் தலைநகரம்

 • bus_fire_kazakhstan

  கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

 • london_light_festival

  குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

 • kalaivanar_arangil11

  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்