SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மினி சுற்றுலா தலமாக மாறியது பண்ணவாடி

2017-12-28@ 11:49:45

மேட்டூர், டிச.28:  மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடியில் தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த நந்தி சிலை வெளியில் தெரிய தொடங்கியுள்ளது. இதனை காண்பதற்காக அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளதால், மினி சுற்றுலா தலமாக மாறியுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அதன் நீர்பிடிப்பு பகுதிகளாக 60 சதுரமைல் பரப்பளவு கணக்கிடப்பட்டது. நீர்த்தேக்க பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

அப்போது, கிராம மக்கள் தங்களது வழிபாட்டு தலங்களை சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றனர். பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் ஜலகண்டேசுவரர் ஆலயமும், 100 அடி உயரம் கொண்ட கிறிஸ்தவ ஆலய இரட்டை கோபுரமும், கீரைக்காரனூரில் சோளப்பாடி வீரபத்ரன் கோயிலும், கோட்டைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இவை சுட்ட செங்கற்களாலும், சுண்ணாம்பு கொண்டும் கட்டப்பட்டவை. இதனால், 83  ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தாலும் சிதையாமல் உள்ளது.

கடந்த சில ஆண்டுக்கு முன்பு பண்ணவாடி பரிசல்துறையில் உள்ள இரட்டை கோபுரங்களில் ஒன்று விஷமிகளால்  சேதப்படுத்தப்பட்டதால் அடியோடு சாய்ந்தது. ஒரு கோபுரம் மட்டுமே தற்போது உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் மேலே உயர்ந்தால், அனைத்து வழிபாட்டு தலங்களும் நீரில் மூழ்கி விடும். 80 அடிக்கு கீழே குறைந்தால் படிப்படியாக ஒவ்வென்றாக வெளியில் தெரியும். அணையின் நீர்மட்டம் 79 அடியாக குறைந்தபோது, பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் வெளியில் தெரிய தொடங்கியது.

நேற்று அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்ததை தொடர்ந்து, நந்தி சிலையின் கழுத்து பகுதி வரை வெளியே தெரிகிறது. அதே வேளையில் நந்தியின் கொம்பு ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோபுரத்தை பார்ப்பதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளனர். இதனால், பண்ணவாடி பரிசல்துறை மினி சுற்றுலா தலம் போல் காணப்படுகிறது.

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையுடன், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன், பண்ணவாடி பரிசல்துறை மற்றும் அணை பூங்காவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள சிறு உணவகங்கள் மற்றும் மீன் வருவல் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மீன்களை சுற்றுலா பயணிகள் ருசித்துச் செல்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்