SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா பயணிகளால் ஊட்டி களைகட்டியது

2017-12-28@ 11:47:38

ஊட்டி, டிச. 28: பள்ளிகளில் அைரயாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். குறிப்பாக பண்டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி தேர்வு விடுமுறைகளின் போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.

தற்போது ஊட்டியில் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர். குறிப்பாக கடந்த இரு நாட்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, கூடலூர் சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று பகலில் நல்ல வெயிலான காலநிலை நிலவியதால் ஊட்டி படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்