SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் விடுமுறையால் முதுமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2017-12-26@ 14:25:49

ஊட்டி: பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் முதுமலையில் குவிந்து வருவதால், கல்லட்டி மலைப்பாதையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளன. செங்குத்தான மலைகளில் குறுகிய, அதே சமயம் கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலைகளாக உள்ளன. இதனால், சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலைப் பாதைகளில் வாகனங்களை இயக்கத் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

குறிப்பாக, கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளே அதிகளவு விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஊட்டியில் இருந்து முதுமலை மற்றும் மைசூருக்கு கல்லட்டி, மசினகுடி மலைப் பாதையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன. காவல்துறையும், வனத்துறையும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தாலும், இப்பாதையில் வேகமாக சென்று பலரும்  விபத்தில் சிக்கி கொள்கின்றனர். தொடர் விடுமுறை காரணமாக தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்கின்றனர்.

எனவே, இச்சாலையில் விபத்துக்களை தவிர்க்க பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சாலையில் பெரிய வாகனங்கள் செல்லாமல் இருக்க அனைத்த பாதைகளையும் கண்காணிப்பது அவசியம். தலைகுந்தா சோதனை சாவடி, கல்லட்டி சோதனை சாவடி மட்டுமன்றி மேலும் சில இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க அறிவுரை வழங்க வேண்டும் என ஊட்டி வாகன ஓட்டுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்