SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாட்களுக்கு பின்னர் தடை விலக்கப்பட்டது குற்றாலம் மெயினருவியில் குளிக்க அனுமதி

2017-12-04@ 14:13:51

தென்காசி: நான்கு நாட்களுக்கு பின்னர் குற்றாலம் மெயினருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஓகி புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 30ம் தேதி முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு பிறகு பழையகுற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் குளிக்க தடை விலக்கி கொள்ளப்பட்ட நிலையிலும் மெயினருவியில் மட்டும் நான்காவது நாளாக நேற்று காலையிலும் தடை நீடித்தது.

இதற்கிடையே கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓய்வெடுத்ததையடுத்து மெயினருவியில் நேற்று மதியம் முதல் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து மெயினருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. எனினும் பாதுகாப்பு கருதி அருவியின் மையப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. அருவியின் ஓரமாக நின்றே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்