குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
2017-11-27@ 11:46:36

தென்காசி: குற்றாலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்கள் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமிருக்கும். சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க செல்வர். சபரிமலை செல்லும் பக்தர்கள் குற்றாலத்தில் புனித நீராடிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு குற்றாலத்தில் கார்த்திகை முதல் தேதி தண்ணீர் குறைவாக விழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அருவிகளில் ஓரளவு தண்ணீர் நன்றாக விழுகிறது. மேலும் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆவதால் தற்போது ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் வரை மாலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகையும் ஓரளவு நன்றாக இருந்தது. குற்றாலத்தில் வெயிலும் இல்லாமல் அதே சமயத்தில் மழையும் இல்லாமல் நிலவும் இதமான சூழல் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுகிறது.
மேலும் செய்திகள்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்!
சாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்
குற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது
தென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு