SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லிமலையில் தொடர் மழை வெள்ளி மலையாக மாறிய ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

2017-11-27@ 11:44:58

சேந்தமங்கலம்:  கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, கொல்லிமலை அமைந்துள்ளது. 60 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இம்மலைக்கு, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடந்த மாதம் பெய்த மழையால், இங்குள்ள மாசிலா அருவி, நம்மருவி மற்றும் ஆகாய கங்கை அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
 
தற்போது, ஆகாய கங்கை அருவியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் நம்மருவி, மாசிலா அருவியிலும் குளித்து, அரப்பளீஸ்வரர் கோயிலில் வழிபட்டனர். அதே போல் சினிபால்ஸ், வாசலூர்பட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து குதுகலித்தனர்.

பின்னர் கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அன்னாசி, வாழை போன்ற பழங்களை வாங்கி சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்