SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

2017-11-20@ 11:46:21

தண்டராம்பட்டு, நவ.20: விடுமுறை தினமான நேற்று, தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை, திருவண்ணாமலை மாவட்டத்திலேயே சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. 119 அடி நீர் மட்டம் கொண்ட சாத்தனூர் அணையில் நேற்றைய நிலவரப்படி 117.53 அடியாக இருந்தது. அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளதாலும், நேற்று விடுமுறை நாள் என்பதாலும் அணையை சுற்றிப்பார்க்க வெளி மாவட்ட, மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சாத்தனூர் அணை அருகே அமைந்துள்ள முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, ஆதாம் ஏவாள் பூங்கா, ராக்கெட் பூங்கா, படகு குளம், தொங்கு பாலம், நீச்சல் குளம் ஆகியவற்றை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். மேலும், அணையில் பிடிக்கப்படும் மீன்களை வாங்கி அங்கேயே சமைத்து சாப்பிட்டு இளைப்பாறி சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்