SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு திற்பரப்பில் திரண்ட சுற்றுலா பயணிகள்

2017-11-20@ 11:44:15

குலசேகரம், நவ.20:  குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை ஓரளவு கைகொடுத்தது. இதனால் வறண்டு கிடந்த பல நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. ஆனால் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.
 
வெயிலில் இருந்து தப்பிக்க நீர்சார்ந்த சுற்றுலா தலங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர். மேலும் உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பதார்த்தங்களையும் நாடி வருகின்றனர். இதனால் நொங்கு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, பழங்கள் போன்றவற்றின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 தினங்கள் விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது.
மேலும் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு திரும்பினர். மேலும் சூழியல் சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பேச்சிப்பாறை, கோதையாறு, குற்றியாறு இரட்டை அருவி போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது. மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் நேற்று அதிகமானோர் சுற்றுலா வந்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்