SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல்

2017-11-20@ 11:42:58

பென்னாகரம், நவ.20:  விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களை கட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை தினமான ேநற்று, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் பரிசல் ஓட்டிகள், மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால், ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்