SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் நீர்மட்டம் 1.32 அடியாக உயர்வு

2017-11-10@ 14:13:14

வில்லியனூர்: கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் ஊசுட்டேரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மீண்டும் படகு சவாரி துவங்கியுள்ளது. வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரி புதுவை- தமிழக பகுதிகளை சேர்ந்த 390 ஹெக்டேர் நிலப்பரப்பை கொண்டது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு போய் இருந்த நிலையில் சில மணல் மாபியாக்கள் மணல் திருடி வந்தனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையால் வீடுர் அணை நிரம்பி சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பியது.

இதனால் கடல்போல் காட்சியளித்த ஊசுட்டேரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து பல விதமான பறவைகள் வந்து குடியேறின. இதனால் கடந்த 2009ம் ஆண்டு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது. இதனால் அரசு சார்பில் படகு குழாம் அமைத்து படகு சவாரி விடப்பட்டது. பின்னர் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு சென்றுவிட்டு நேரடியாக ஊசுட்டேரிக்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இதன் மூலம் அரசுக்கு அதிகளவில் வருவாய் வந்தது. பின்னர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சீசா மற்றும் உணவு அருந்துவதற்கு கேண்டீன் ஆகியவற்றை அமைத்து கொடுத்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஊசுட்டேரியின் அழகை ரசிப்பதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் வந்து பொழுதுபோக்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை ெபாய்த்து போனதால் ஊசுட்டேரியில் இருந்த நீர் குறைந்து மீண்டும் வறண்டு போய் குளம் போல் காட்சியளித்தது.இதனால் படகு சவாரி கரையோரம் மட்டும் இயங்கி வந்தன. சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைந்தது.

வெளிநாடுகளில் இருந்தும் பறவைகளும் வருவதில்லை. தற்போது இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து ஊசுட்டேரிக்கு நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் 1.32 அடியாக உயர்ந்து சிறு கடல் போல் காட்சியளிப்பதால் மீண்டும் ஊசுட்டேரியில் படகு சவாரி துவங்கியுள்ளது. கரையோரம் மட்டும் சென்ற படகு தற்போது ஏரியின் மையத்திற்கு சென்று வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் உல்லாசமாக ஏரியின் நடுவே சென்று சுற்றிபார்த்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்