SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-11-06@ 12:31:35

மேட்டூர்: மேட்டூர் அணையில் விடுமுறை நாளான நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாதலங்களில் மேட்டூர் அணையும் ஒன்றாகும். அணையையொட்டி, 33 ஏக்கர் பரப்பளவில் எல்பிஎஸ் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சாதாரண நாட்களிலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர்.

காவிரியில் நீராடிய அவர்கள், அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிட்டனர். பின்னர் அணை பூங்காவுக்கு சென்று, விருந்து உண்டு மகிழ்ந்தனர். அத்துடன் சிறுவர் பூங்காவில் ஊஞ்சலாடியும், சறுக்கு விளையாடியும் மகிழ்ந்தனர். பின்னர் மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை சுற்றிப்பார்த்து கண்டுகளித்தனர். அப்போது மான்களுக்கு சிறுவர்கள் தின்பண்டம் வழங்கி மகிழ்ந்தனர். மேட்டூர் அணை பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், குளுமையாக இருந்தது. இதனால் சுற்றுலாபயணிகள் காலை முதல் மாலை அங்கேயே பொழுதை கழித்தனர். நேற்று மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

போதை ஆசாமிகள் அட்டகாசம்: மேட்டூர் அணைக்கு நேற்று ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். இவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, ஆபத்தான முறையில் அணைக்கட்டு முனியப்பன் கோயில் அருகே சுற்றுச்சுவரிலிருந்து தலைகீழாக தண்ணீருக்குள் குதித்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஒர்க்‌ஷாப் கார்னரில் இருந்து முனியப்பன் கோயில் செல்லும் வழியில், ஏராளமானோர் திறந்தவெளியில் மது அருந்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பெண்களுக்கு பெரிதும் தொல்லை கொடுத்தனர். இதனால் பெண்கள் பீதியடைந்தனர். ஆகவே, திறந்த வெளியில் மது அருந்தி பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்கள் உடை மாற்றும் அறை கட்டப்படுமா?
அணைக்கட்டு முனியப்பன் கோயில் அருகே நீராடும் பெண்களுக்கு உடை மாற்றும் அறை இல்லை. இதனால் பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் இளைஞர்கள் செல்போனில் படமெடுப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதேபோல் நேற்றும் படமெடுத்தனர். இதை தட்டிக்கேட்ட சுற்றுலாபயணிகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து சுற்றுலாபயணிகள் கூறுகையில், பெண்கள் குளிக்கும் படித்துறை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததே இதற்கு காரணம். இளைஞர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலாபயணிகளின் வருகை குறைந்துபோகும். ஆகவே, இதை தடுக்க இப்பகுதியில் பெண்கள் உடை மாற்றும் அறை கட்ட வேண்டும். அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் போட வேண்டும், என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்