SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேஆர்பி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-10-23@ 10:36:57

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணை பூங்காவில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்மையான சுற்றுலா தலமாக, கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் ஆகியவை உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள சிறுவர் பூங்காவிற்கும், படகு இல்லத்திற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அத்துடன் கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி அணை பூங்காவிற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாக பெய்து வரும் கன மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் சுமார் 100க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் கிருஷ்ணகிரி அணைக்கு வந்திருந்தனர். இவர்களில் பலர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரில் குளித்தும், அதன் ரம்மியான காட்சியையும் கண்டுகளித்து மகிழ்ந்தனர். அத்துடன் அணை பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்கு பலகை உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் மேல்பகுதியில் உள்ள மீன் கடைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்கி சாப்பிட்டனர். இதனால் அணை பகுதியில் நேற்று கூட்டம் அலைமோதியது. அணை பகுதியில் ஏராளமானோர் குவிந்ததால், பாதுகாப்பு பணியில் அணை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்