SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

2017-10-23@ 10:35:46

நாகர்கோவில், : குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 20.60 அடியாக இருந்தது. அணைக்கு 1818 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

604 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 50.30 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 279 கனஅடி தண்ணீர் திறந்து விட்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 6.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 166 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 7.08 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 107 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பொய்கையில் மைனஸ் 4 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையில் 32.73 அடியாகவும் நீர்மட்டம் காணப்படுகிறது. நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 112.8 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இருப்பினும் பகல் பொழுதில்  வெயில் கொளுத்தியது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்