SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல்

2017-10-23@ 10:34:36

பென்னாகரம், : விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களை கட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், மெயினருவியில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.

தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ேவலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பரிசல் ஓட்டிகள், ேநற்று முன்தினம் அதிகாரிகள் நடத்திய ேபச்சுவார்த்தைக்கு பின்னர், தங்களது போராட்டத்தை கைவிட்டு பரிசல் ஓட்ட தொடங்கினர். இதனால், நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். கூட்டம் அலைமோதியதால் ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்