SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி விடுமுறையொட்டி திரண்டனர் சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாததால் அவதி

2017-10-20@ 11:35:36

தண்டராம்பட்டு : தீபாவளி பண்டிகையையொட்டி சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போதிய பஸ் வசதிகள் செய்து தராததால் அவர்கள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய சுற்றுலாத்தலமாக சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையை சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள முதலை பண்ணை சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒன்றாகும்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையில் திறந்து விடப்பட்டுள்ள உபரிநீரின் வரத்து அதிகரித்துள்ளதாலும் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119 அடி உயரத்தில் நேற்றைய நிலவரப்படி 117.20 அடி உயரத்துக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.  அதனால் அணையில் உபரி நீர்  தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 11 கண் மதகு வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறது.

நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதாலும் நேற்று விடுமுறை நாள் என்பதாலும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் அணையை கண்டுகளிக்க குடும்பத்தினருடன் வந்தனர். சுற்றுலா பயணிகள் அணையில் உள்ள முயல் பூங்கா, சிறுவர் பூங்கா, ஆதாம் ஏவாள் பூங்கா, நீச்சல் குளம், படகு குழாம், முதலைப்பண்ணை ஆகியவற்றை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக இருந்தது.

ஆனால் போக்குவரத்து துறை சார்பில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் வசதி எதுவும் செய்யப்படவில்லை. சாத்தனூர் அணை காவல்துறையினர் கடும் சோதனைக்குப்பின் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதித்தனர். அடிப்படை வசதிகளே செய்யப்படாத நிலையில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தியுடன்  சென்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்