SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளியால் களைகட்டிய களக்காடு தலையணை பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

2017-10-20@ 11:33:53

களக்காடு : தீபாவளி விடுமுறையால் களக்காடு தலையணை களை கட்டியது. இங்கு குவிந்த சுற்றுலா பயணிகள், தலையணையில் ஓடும் பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்தனர். பட்டாசுகள்  வெடித்து, புத்தாடை அணிந்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்  பல்வேறு சுற்றுலாதலங்களுக்கும் சென்றனர். இதேபோல் களக்காடு புலிகள் காப்பக மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையிலும்  நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. காலை முதலே சுற்றுலா  பயணிகள் படையெடுக்க துவங்கினர். அவர்கள் கார், வேன் டூவீலர்கள் மற்றும்  வாகனங்களில் வந்தனர்.

தலையணை சோதனை சாவடியில் மதுபாட்டில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுலா பயணிகள்  கொண்டு  வருகிறார்களா? என்று வனத்துறையினர் தீவிரமாக சோதித்தனர். சிலர் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  நுழைவு கட்டணம் செலுத்திய பின் அவர்கள் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்த  சுற்றுலா பயணிகள் தலையணையில் ஓடும் பச்சையாற்றில் குளித்து  மகிழ்ந்தனர்.

அங்குள்ள தடுப்பணை அருவியிலும் ஆர்வமுடன் குளித்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த  உணவுகளை அங்கு வைத்து சாப்பிட்டனர். உள்ளூர் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாபயணிகள் குவிந்திருந்தனர். ஆற்றுப்பகுதியில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகளவில்  காணப்பட்டது. வேறு எங்கும் இல்லாத வகையில் தலையணையில் ஓடும் தண்ணீர் குளிர்ச்சியுடன் இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். மழை இல்லாததால் கடந்த வாரத்தைவிட தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தே காணப்பட்டது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ உத்தரவின் பேரில் வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்