SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 ஆண்டுகளுக்கு பின் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

2017-10-13@ 13:04:27

ஊட்டி : இரண்டு ஆண்டுகளுக்கு பின் கல்லட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள கல்லட்டியில் நீர் வீழ்ச்சி உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைபாதையில் செல்லும் போது, இங்குள்ள நீர் வீழ்ச்சிக்கு செல்வது வழக்கம். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மழை பெய்யாத நிைலயில், அனைத்து அணைகள் மற்றும் நீரோடைகள் வறண்டன. இதில், காமராஜ் சாகர் அணையில் இருந்து கல்லட்டி வழியாக மாயார் செல்லும் நீரோடைகள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் வற்றியது. இதனால், கல்லட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் இன்றி வறண்டது. கடந்த இரு ஆண்டுகளாக இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாத நிலையில், முதுமலை, மசினகுடி மற்றும் மைசூர் செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதை தவிர்த்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீலகிரியில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் புறநர் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கல்லட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால், முதுமலை மற்றும் மைசூர் செல்லும் சுற்றுலா பயணிகள் தற்போது கல்லட்டி நீர் வீழ்ச்சிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sikhs_str11

    சீக்கியர்களின் திருநாளான குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மத ஊர்வலத்தில் மாணவர்கள் ஆயத்தம்

  • 9thday_thiru1

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 9ம் நாள் : விநாயகர் முஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்திலும் வீதி உலா

  • saalai_mari111

    குடிநீர், மின்சாரம் கேட்டு கூத்தாநல்லூர் அருகே மக்கள் சாலை மறியல்

  • kajaa_puyal123a

    கஜா புயல் பாதித்த டெல்டா பகுதிகளில் ஆளுநர் ஆய்வு : மக்கள் குறைகளை கேட்டு ஆறுதல் கூறினார்

  • kaarthigai_8mday1

    தி. மலை கார்த்திகை தீபத்திருவிழா : 8ம் நாளில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்