SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா பயணிகளை கவரும் கடமான்கள்

2017-10-06@ 12:55:30

ஊட்டி: ஊட்டி சூட்டிங் மட்டம் பகுதியில் சாலைகளில் உலாவரும் கடமான்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வனங்களை ஒட்டியே உள்ளன. ஊட்டியில் இருந்து கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் சாலையில் சூட்டிங்மட்டம், நீர்காசிமந்து போன்ற பகுதிகள் வனங்களை ஒட்டியே உள்ளன. இதனால், இப்பகுதிகளில் வன விலங்குகள் அவ்வப்போது தென்படுவது வழக்கம். குறிப்பாக, மான்கள், காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது வழக்கம்.

சமீப காலமாக இப்பகுதியில் கடமான்கள் அதிகளவில் சாலைகளுக்கு வந்து செல்கின்றன. நீண்ட கொம்புகளை கொண்ட இந்த மான்களை கண்டவுடன் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்கின்றனர். நேற்றும் சூட்டிங் மட்டம் செல்லும் சாலையில் திடீரென கடமான் ஒன்று சாலைக்கு வந்தது. இந்த மான் வெகு நேரம் சாலையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. ேமலும், சுற்றுலா பயணிகளை கண்டு மிரளாமல் போட்டோ எடுப்பவர்களுக்கு போஸ் கொடுத்து நின்றது. சுற்றுலா பயணிகள் பலரும் இந்த மானை கண்டு ரசித்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்