SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் பார்க்க மறக்காதீங்க... பூத்து குலுங்குது சங்ககால ‘ஈகை’

2017-10-04@ 16:01:35

கொடைக்கானல் : கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சங்ககால ஈகைப்பூவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். கொடைக்கானல், உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மட்டுமின்றி அரிய வகை செடி, மலர்களுக்கு பெயர் பெற்ற இடமாகும். அந்த வகையில் சங்க கால இலக்கியங்களில் அதிகளவில் பதியப்பட்ட, பாடப்பட்ட ஈகை மலர்கள் தற்போது கீழ்மலை பகுதியில் அதிகளவில் பூக்க துவங்கியுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த செடியின் தண்டுகளை தொட்டாலே இலைகள் மூடி கொள்ளும். அதன்பின்பு சுமார் 2 மணிநேரம் கழித்தே மீண்டும் இலைகள் திறக்கும்.

இதனால் இதற்கு தொட்டால் சிணுங்கி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இதன் இலைகள், தண்டுகளில் மருத்துவ தன்மை அதிகளவில் உள்ளதென்றும், தற்போது செடிகளில் பூத்து வரும் இந்த மலர்கள் சங்க காலங்களில் மரங்களில் பூத்ததென்றும் கொடைக்கானல் மலைவாழ் ஆதிவாசி பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘இந்த ஈகை செடியில் 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள இந்த செடியை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க முன்வரவேண்டும்’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்