SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுமுறையில் வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்கள் சுற்றுலா நிறுவன ஆய்வில் தகவல்

2017-10-04@ 16:00:01

இந்தியர்களில் சுமார் 23 சதவீதம் பேர் விடுமுறை தினங்களில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல  விரும்புகின்றனர் என சுற்றுலா நிறுவன ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. சுற்றுலா துறையில் பிரபலமான யாத்ரா டாட் காம் என்ற தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரத் தால் அளித்த பேட்டி:
 
இந்தியர்கள் தற்போது மிகவும் மாறிவிட்டார்கள். தங்களது அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விடுமுறை தினங்களை பயனுள்ளதாக கழிக்க விரும்புகின்றனர். இதற்காக புதிய புதிய சுற்றுலா இடங்களுக்கு சென்று பார்க்க விரும்புகின்றனர் என்றார். நாடு முழுவதும் பல பெரிய நகரங்களில் சுமார் 2,700 பேரிடம் சுற்றுலா பற்றியும் அவர்களின் விருப்பம் பற்றியும் தகவல் சேகரிக்கப்பட்டது. இதில், இந்தியர்கள் முன்புபோல் இல்லாமல் தற்போது பல்வேறு சுற்றுலா இடங்களுக்குச் சென்று பார்த்து மகிழ விரும்புகின்றனர். இதற்கு தற்போது உள்ள தகவல் ஊடகங்கள், செல்போன்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பெரிதும் உதவியாக உள்ளன.

திருவிழா விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்ல விரும்புவதாக சுமார் 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சுமார் 40 சதவீதம் பேர் தங்களது சுற்றுலா பயணத் திட்டத்தை சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாக திட்டமிட்டுவிடுகின்றனர். இதற்கு காரணம் தற்போது  கட்டண சலுகையில்  விமானங்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளில் சுமார் 42 சதவீதம் பேர் மூன்று முதல் நான்கு ஸ்டார் ஓட்டல்களில் தங்குவதற்கு ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்கின்றனர். அதுபோல் சுமார் 25 சதவீதம் பேர் பட்ஜெட் ஓட்டல்களில் அறைகள் எடுத்து தங்க விரும்புகின்றனர். இதற்கு சுற்றுலா செலவில் சிறிது குறைக்கவே இந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்துவதால், செலவைக் குறைக்க இதுபோன்ற ஓட்டல்களில் தங்குவதை பலர் குறைத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் மாநிலத்திற்குள்ளேயே பக்கத்து மாநிலத்திற்கோ சுற்றுலா குறுகிய நாள் சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். கல்வி கற்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதை விரும்புவதாக சுமார் 22.7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சுமார் 63 சதவீதம் பேர் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

வேலை பார்ப்பவர்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திருவிழா விடுமுறை தினங்களிலேயே சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். அதுவும் பெரிய நகரங்களுக்கு சென்று சுற்றி பார்த்து வர விரும்புகின்றனர். இந்த திருவிழா விடுமுறையில் கேரளாவுக்கு சுற்றுலா பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கோவா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றுக்கும் இயற்கையை ரசிக்க பெரும்பாலானவர்கள் சென்றனர். இதேபோல் துபா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளுக்கும் சுற்றுலா செல்ல பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaicmpalanysamy

  காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

 • LemonFestivalMenton

  பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

 • FloridaguncultureStudents

  புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 • KenyaElephants

  யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

 • WorldPressPhoto2018

  உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X