SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளம் குறைந்ததால் களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

2017-09-25@ 12:07:03

களக்காடு : களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலையணையில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் திரளான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். கடந்த சில மாதங்களில் நிலவிய கடும் வறட்சி காரணமாக மூடப்பட்டிருந்த தலையணை, செப்.2ம் தேதி திறக்கப்பட்டது.

கடந்த வாரம் களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரலுடன் பெய்த மிதமான மழையால் கடந்த 17ம் தேதி முதல் தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இளங்கோ உத்தரவுப்படி, தலையணையில்
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. ஆனால் தலையணைப் பகுதியை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையே மலைப்பகுதியில் மழை நின்றதால் கடந்த சில நாட்களாக தலையணையில் வெள்ளம் தணிந்தது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் தலையணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார்கள், டுவீலர்களில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சுற்றுலா பயணிகள் வந்து தலையணையில் குளித்து மகிழ்ந்தனர். களக்காடு பொறுப்பு வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்