SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளவரசி பூமிக்கு ஆஸ்திரேலிய பறவை வருகை: சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிப்பு

2017-09-20@ 15:08:51

திண்டுக்கல்: குளுமையான சீசன் நிலவுவதால் கொடைக்கானலுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த, 'லிட்டில் ஈக்ரெட்' என்ற பறவைகள் வந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டாலே. பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருந்து வெளிநாட்டு பறவைகள் விருந்தாளிகளாக வருவது வழக்கம்.

இங்கு சுமார் 6 மாதங்கள் வரை தங்கி விட்டு, மீண்டும் தங்கள் நாடுகளுக்கு பறந்து சென்று விடும். கொடைக்கானலுக்கு தற்போது புதிய விருந்தாளியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த லிட்டில் ஈக்ரெட் என்ற பறவைகள் வந்துள்ளன. கொக்கை போன்று வெண்மையான நிறத்தில் இருக்கும் இந்தப்பறவை, கண்டம் விட்டு கண்டம் பறப்பதில் கில்லாடியாம். பறவையின் அழகை கண்டு சுற்றுலாப்பயணிகள் பரவசம் அடைகின்றனர்.

இப்பறவைகள் கொடைக்கானல் ஏரியில் உள்ள மீன்கள், பூச்சிகளை வேட்டையாடுகின்றன. இந்தப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காக ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் உள்ள வெப்பமண்டல பகுதிகளுக்கு இடம் பெயர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மற்ற நேரங்களில் குளிர் பிரதேசங்களை தேடிச்செல்வதால் இந்தப்பறவைக்கு 'குளிர்காலப் பறவை' என்றும் பெயர் உண்டு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2018

    13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்