SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

2017-09-12@ 14:30:11

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், குரங்கு அருவியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை பகுதியில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்த தென்மேற்கு பருவ மழையால், ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்தது.

இதில் அவ்வப்போது, பொழிந்த கன மழைக்கு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின், சில நாட்களில் தண்ணீர் குறைந்ததையடுத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பொழிந்த மழையால், குரங்கு அருவிக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதில் நேற்று முன்தினம் பொழிந்த கனமழையால் குரங்கு அருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரிக்க துவங்கியது.   பின் நேரம் செல்ல செல்ல, பயணிகள் குளிக்கும் இடத்தை தாண்டி தண்ணீர் கட்டுக்கடங்காமல் கொட்டியதுடன், செம்மண் நிறத்தில் தண்ணீர் வந்தது. இதையடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க, தடுப்புகள் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்