SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

2017-09-12@ 14:28:14

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டுவதால் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும். சமீபத்தில் கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்பட்ட காலத்திலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.  வறண்டு காணப்பட்ட கோதையாற்றில் தண்ணீர் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகம் கொட்டி வருகிறது. வழக்கமாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் நேற்றுமுன்தினம் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. குற்றால சீசனை நினைவு கூறும் வகையில் திற்பரப்பில் அவ்வப்போது மழையும், மிதமான காற்றும் வீசி வந்தது. மேகமூட்டமும் அடர்ந்து காணப்பட்டதால் ரம்யமான சூழல் நிலவியது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகம் கொள்ள செய்தது. திற்பரப்பு தடுப்பணையில் படகுகளில் பயணிகள் உல்லாச சவாரி மேற்கொண்டனர்.

திருவட்டார் அருகேயுள்ள ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலத்தை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். தற்போது தொட்டிபாலம் வழியாக செல்லும் சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்ந்து செல்வதையும், இதமான சூழலையும் அனுபவிக்க ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியதோடு வாகனம் நிறுத்தும் பகுதியில் இட வசதி இல்லாததால் நெருக்கடியான சூழல் காணப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்