SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் மழையால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

2017-09-12@ 14:25:57

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் இன்றி தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எந்நேரமும், மேக மூட்டமாகவும், சாரல் மழையும் பெய்து வருகிறது. பிற்பகலுக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால், கடும் குளிர் நிலவுகிறது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டின. விடுமுறை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.  

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் குறைந்தளவு சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். மழையால்,  தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து  காணப்பட்டதால், பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. அதே சமயம், மழையால், அனைத்து சுற்றுலா தலங்களும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • EPSILON3_Japan

    3ம் தலைமுறை செயற்கைகோள் கொண்ட எப்சிலன்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஜப்பான்

  • republic69

    நாட்டின் 69வது குடியரசு தினத்துக்காக தயாராகும் தேசிய கொடிகள்

  • Sukhoi30NirmalaSitharaman

    சுகோய் 30 ரக போர் விமானத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: புகைப்படங்கள்

  • 18-01-2018

    18-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_japann11

    இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து நடத்திய கூட்டுப்பயிற்சி !!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்