SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலம் மெயினருவியில் வெள்ளம் குறைந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

2017-09-12@ 14:24:11

தென்காசி: கற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, நேற்று மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதியோடு சீசன் முடிவடைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வவ்போது பெய்யும் மழை காரணமாக தற்போது அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் குற்றாலம் நகர பகுதியில் மழை இல்லாத போதும், நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மெயினருவியில் நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை 5 மணியளவில் மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மதியத்திற்கு பிறகு படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தடை விலக்கப்பட்டதையடுத்து அங்கு குவிந்திருந்த சுற்றுலா பயணிகள், அருவியில் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர். ஐந்தருவி, புலியருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றாலத்தில் ஓரளவு தண்ணீர் விழுந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்