SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்: திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு தடை

2017-09-12@ 14:22:23

உடுமலை:  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலின் மேலேயுள்ள மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோயிலை தரிசிக்கவும், அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் தினசரி அதிகளவில் வருகின்றனர். பயணிகள் அருவியில் குளித்துவிட்டு வந்து அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்வது வழக்கம்.
 
இந்நிலையில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு வழக்கத்தை விட நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை மேலும் நீர் வரத்து அதிகரித்ததால், அருவியில் மக்கள் நெருங்க முடியாத அளவிற்கு நீர் கொட்டியது. அருவியில் இருந்து வரும் நீர் ஓடையின் வழியாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை ஒட்டியவாறு சென்று திருமூர்த்தி அணையில் சேர்கிறது. நேற்று ஓடையில் நீர் வரத்து அதிகரித்ததால், அது கோயிலையும் சூழ்ந்தது.

இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் கோயில் பகுதிக்கு செல்லவும், அருவிக்கும் செல்லவும் வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்தனர். கடந்த 2ம் தேதியும் இதே போல் நீர் வரத்து அதிகரித்ததால், தடை விதிக்கப்பட்டது. நீர் வரத்து அதிகரிப்பால் திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. மொத்தமுள்ள 60 அடி நீர்மட்டத்தில், நேற்று 53 அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 722 கன அடியாக உள்ளது. தற்போது அணையில் இருந்து பிஏபி 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் வினாடிக்கு 1,143 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்