SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-09-11@ 15:15:31

பென்னாகரம் : விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதும் வழக்கம். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மெயினருவியில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். மேலும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர்.

நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த 1ம் தேதி முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது, அந்த தடை 10வது நாளாக நேற்றும் நீடித்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால் ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்