SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொடர் விடுமுறையால் குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

2017-09-05@ 14:59:01

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவிக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் வால்பாறை ரோட்டில் உள்ள குரங்கு அருவிக்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக குரங்கு அருவியின் நீர் வழித்தடங்களான சக்தி எஸ்டேட், கவர்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்ததால், அருவியில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.

இதனால், சில தினங்களாக குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையால் தடை விதிக்கப்பட்டது. விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் அருவியில் திடீர் வெள்ளம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஓணம் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்பறித்து கொட்டும் தண்ணீரில், குளித்து மகிழ்ந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்