SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-09-04@ 15:06:16

பென்னாகரம் : விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதும் வழக்கம். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மெயினருவியில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். மேலும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். நீர்வரத்து அதிகமாக இருந்தால் 3வது நாளாக ேநற்று பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால் ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்