SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குற்றால அருவிகளில் குதூகலம்

2017-08-29@ 11:31:54

தென்காசி : மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக வெயில் காணப்பட்ட நிலையில் நேற்று இதமான சூழல் நிலவியது. மேலும், மலைப்பகுதியில் மழையும் பெய்ததால், காலை சுமார் 11 மணி முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதையடுத்து போலீசார் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதித்தனர். ஐந்தருவியில் 5 பிரிவுகளில் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. கூட்டம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் வரிசையின்றி குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 8 மணிக்கு மேல் சுமார் அரை மணி நேரம் தென்காசி, குற்றாலம் பகுதியில் மழை பெய்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tiltinghouseamerica

    அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

  • bridgecollapsed

    கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்