SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்க தடையால் ஏமாற்றம்

2017-08-26@ 13:52:23

பென்னாகரம் :  தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பரிசல் இயக்க தற்காலிமாக தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதும் வழக்கம். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், வறண்டு கிடந்த ஒகேனக்கல் அருவிகளில், தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

கடந்த சில நாட்களாக கர்நாடக பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  மெயினருவியில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், தொங்கும் பாலத்தில் இருந்து நீர்வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நீர்வரத்து அதிகமாக இருந்தால், பரிசல் இயக்க தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கூட்டம் அலைமோதியதால் ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X