SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2017-08-24@ 17:26:35

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில்  கூட்டமாக மேயும் மான்களை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கண்டு மகிழ்ந்து  செல்கின்றனர்.  இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சத்தியமங்கலம்  வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது.  கடந்த ஒருமாதகாலமாக  ஆசனூர் வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வறண்டு கிடந்த  வனப்பகுதி பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது.

இதில் சத்தியமங்கலம் -  மைசூர் சாலையில் காரப்பள்ளம் என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் அதிக  அளவில் வளர்ந்துள்ள பார்த்தீனிய செடிகள் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு  வெட்டி அழிக்கப்பட்டது. இதையடுத்து மழை பெய்ததால் அப்பகுதியில் புற்கள்  அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில்  புள்ளிமான்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக மேய்கின்றன. சாலையோரத்தில்  புள்ளிமான்கள் மேய்ச்சலில் ஈடுபடும் காட்சியை சாலையில் செல்லும் வாகன  ஓட்டிகள் மற்றும் பயணிகள் நின்று மான்களை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்.  சாலையோர வனப்பகுதியில் மேயும் மான்களை பயணிகள் இடையூறு செய்யாமல்  பார்த்துச்செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்