SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்

2017-08-21@ 14:06:43

கொடைக்கானல் : கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் 35 வகையான உள்நாட்டு, வெளிநாட்டு நாய்கள் கலந்து கொண்டன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கெனைன் சங்கம் சார்பில் நடந்த கண்காட்சியில் ராட் வில்லர், டாபர் மேன், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்டு, ஷான் பர்னார்டு, வைன் மரைனர், லஸ் ராடர், ரெட் சீவர், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, பஸ்மி, கோம்பை, பொமரேனியன், ஹஸ்கி, பிட்புல், சிஜோஸ், காக்கர்ஸ் ஸ்பானியல், லேபர் டாக், சுவாவி, ஜயன் பர்னார்டு, பக் என 35 வகை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாய்கள் பங்கேற்றன.

கண்காட்சியில் மொத்தம் 200 நாய்கள் பங்குபெற்றன. போட்டி 11 பிரிவுகளாக நடந்தது. நாய்களின் மோப்பத் திறன், பராமரிப்பு, விதிமுறை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கண்காட்சியில் பங்கு பெற்ற 8 நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரே இடத்தில் விதவிதமான நாய்களை பார்த்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்