SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-08-21@ 14:05:31

சேந்தமங்கலம் :  கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணி கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் மாறி, ஜில்லென குளிர்ந்த காற்று வீசுகிறது.

தொடர் மழை காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினிபால்ஸ், மாசிலா அருவி, நம்மருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும், கொல்லிமலையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் கொல்லிமலையே நீண்ட நாட்களுக்கு பிறகு களைகட்டி காணப்பட்டது.
 
கொல்லிமலையில் அரப்பளீஸ்வரர், எட்டுக்கை அம்மனை தரிசித்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் உல்லாச குளியல் போட்டு மகிழ்ந்தனர். இதனிடையே நேற்று ஆங்காங்கே மலையின் இடையே மேக கூட்டங்கள் தவிழ்ந்து சென்ற காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலாபயணிகளின் வருகையையொட்டி, அன்னாசி, கொய்யா, வாழைப்பழங்கள் விற்பனை ஜோராக நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்